Mobile

Monday, November 19, 2012

E-mail வழியாக Fax அனயுப்ப வேண்டுமா ?


நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.


சுட்டிகள் : Email to FAX

Sunday, November 18, 2012

Pass Word உடன் E-Mail அனுப்ப வேண்டுமா? - LOCKBIN


ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.


தளத்திற்கான சுட்டி

உங்களுடைய Gmail Account வேறு இடத்தில் login செய்யபட்டுள்ளதை Logout செய்ய !

animated gif




GMAIL-இன் பல வசதிகள் நாம் அறிந்ததே.அது மேலும் ஒரு
முக்கியமான வசதி ஒன்றை நமக்கு அளிக்கின்றது.அதாவது
உங்களுடைய Gmail Account எங்கெங்கு login செய்யபட்டுள்ளது
என்று உங்களளுக்கு தெரியப்படுத்தும் வசதிதான் அது .

இது என்ன அவ்வளவு முக்கியமான வசதியா ? என்று நீங்கள்
கேட்கலாம். ஆம் இது ஒரு முக்கியமான சேவை ஏனென்றால்
நீங்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலகத்தில் உள்ள உங்கள்
கணினியில் Gmail Acoount - ஐ Logout செய்யலாம் அல்லது
வேறு எங்காவது நீங்கள் logout செய்ய மறந்திருந்தால் , இந்த
சேவை உங்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும் .

அதை எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம் ...

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என அறிய

animated gif
நாம் அனுப்பிய Mail போய் சேர்ந்ததா? நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா? என்றறிவது அவர்கள் பதில் Mail அனுப்பினால்தான் தெரியும். அதற்கு உதவுவது தான் இந்த spybig தளம் (SPYPIG). இது ஒரு இலவச சேவைதான்.
முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பின் மேற்கூறிய இணையத் தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரது இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் drag செய்வது Mail படிப்பவர்களுக்குத் தெரியாது. மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் Drag செய்வது தெரியும். சூழ்நிலைக்குத் தக்க படங்களினைத் தேர்வு செய்வது அவசியம். பின் “Click to activate My Spypig” என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும். அதனை Copy செய்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து Copy செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.
யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:-
WWW.SPYPIG.COM
animated gif
 

Wednesday, November 14, 2012

ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு

தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும்.
அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம்.
தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

Tuesday, November 13, 2012

Email மூலம் மின்னஞ்சல்களை இரகசியமாக அனுப்புவதற்கு !

நம் அன்றாட வாழ்வில் முன்னோருபோது தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பல வழிகள் காணப்பட்டது இப்போது இணையத்தின் உதவியோடு இ -மெயில் மூலம் மின்னஞ்சல்களாக அனுப்புகின்றோம் . அவ் மின்னஞ்சளை அனுப்புவதிலும் பல விசயங்களை மறைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது  சில வேளைகளில் ,

மின்னஞ்சல் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல மின்னஞ்சல்  செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை.
அதாவது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் மின்னஞ்சல் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது.
இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது. யாருக்கு மின்னஞ்சல் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம்.
இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும். அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும். காரணம் அவர் படித்து முடித்தபிறகு இந்த செய்தி காணாமல் போய்விடும். அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்பபட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்தியை படித்துவிட முடியாது. இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான மின்னஞ்சல் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் மின்னஞ்சல் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம். 


 இணையதள முகவரி :

Tuesday, November 6, 2012

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் சேவை !.......-

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு 

நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம். 

இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். 

இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். 

மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். 

இல்லாவிட்டால் http://tools.google.com/gears/ சென்று நிறுவிக் கொள்ளவும். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும். 

இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும். இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்.