இமெயில்
பயன்படுத்தாதவர்களையோ அதன் மூலம் பயன் பெறாதவர்களையோ இன்று காண முடியாது.
ஏதாவது ஒரு வகையில் இமெயில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பங்கு கொள்கிறது.
அல்லது பெறுகிறார்கள். எனவே ஒருவரின் தராதரத்தை நிர்ணயிக்கும் ஒரு சாதனமாக
இமெயில் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை
நாம் கவனமாகக் கையாள வேண்டாமா? இதோ இமெயில் அனுப்பும் ஒருவர் கடைப்பிடிக்க
வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காணலாம்.
1.எழுதுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். இதற்கு முன் கையாண்ட முறைகளைக் காட்டிலும் மிக வேகமாக செய்திகளை அனுப்பலாம் என்பதற்காக மிக வேகமாக இமெயில் கடிதங்களை எழுதி அனுப்ப வேண்டாம். முதலில் நீங்கள் அனுப்பும் கடிதம் தெளிவாகவும் நீங்கள் சொல்ல விரும்புவதைச் சரியாக எடுத்துக் கூறுவதாகவும் இருக்க வேண்டும்.
2. நீங்கள் என்ன கூறினாலும் பின் நாளில் அதனை நீங்கள் கூறவே இல்லை எனச் சாதிக்கலாம். ஆனால் இமெயில் கடிதத்தில் நீங்கள் எழுதி விடுகிறீர்கள். எனவே என்றும் அதனை மறுக்க இயலாது. எனவே நன்கு யோசித்து இதனை எழுதினால் பிரச்சினை இல்லை என்று முடிவு செய்த பின் எழுதவும்.
3. உங்கள் செய்தி சுருக்கமாக இருக்கட்டும். சாதா ரணமாகத் திரையில் பிற புரோகிராம்களில் தெரியும் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் இமெயிலில் தெரியும். எனவே சுருக்கி எழுதவும். மிக விரிவாக எதனையாவது எழுத வேண்டும் என்றால் அதனைத் தனி பைலாக, டாகுமெண்ட்டாக எழுதி இணைப்பாக அனுப்பவும். சுருக்கி எழுதுகையிலும் தெளிவாக எழுத வேண்டும். சுருக்கிச் சொல்வதாக எண்ணிக் கொண்டு விஷயங்களை மாற்றியோ அல்லது தெளிவில்லாமலோ எழுதக் கூடாது.
4. இமெயில் என்பது இரகசிய ஆவணங்கள் அல்ல. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தங்கள் நிறுவன சர்வரில் இடம் அளித்து இமெயில் பரிமாறிக் கொள்ள அனுமதித்தாலும் அவற்றைப் படித்து பார்க்கும் உரிமையை நிறுவன நிர்வாகிகளும் வைத்திருப்பார்கள். எனவே மற்றவர் படிக்கக் கூடாத செய்திகளை அனுப்ப வேண்டாம்.
5. உங்கள் இமெயில்களைப் படிப்பவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். ஒழுக்கத்தைக் கற்றுத் தர முயற்சிக்காதீர்கள். இது பிரச்சினையை வளர்க்கும்.

6.
தேவையற்ற செய்திகளை அடிக்கடி அனுப்ப வேண்டாம். அது ஸ்பேம் மெயில் மாதிரி
ஆகிவிடும். பின் உங்கள் மெயில்களைப் பார்த்தாலே உங்கள் நண்பர்கள்
படிக்காமலேயே குப்பைத் தொட்டிக்குப் போகும் வகையில் அழித்துவிடுவார்கள்.
7. ஆங்கிலத்தில் எழுதுகையில் கேப்பிடல் எழுத்துக்களில் எழுதாதீர்கள். இது ஒருவரை நோக்கி தொண்டை கிழிய கத்திப் பேசுவதற்கு ஒப்பாகும். உங்களை நாகரிகமற்றவர் என மற்றவர்கள் எண்ணுவார்கள்.
8. அதற்காக முழுக் கடிதத்தையும் சிறிய எழுத்துக்களில் எழுத வேண்டாம். வழக்கம்போல் எழுதவும்.
9. “Subject” லைனில் நீங்கள் எழுதும் கடிதத்தின் மையக் கருத்தை ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதவும். நான் யார் தெரிகிறதா? இது இவரிடமிருந்து.. என்றெல்லாம் எழுதுவதைத் தவிர்க்கவும்.
10. கடிதத்தை எழுதி முடித்த பின் மூடிவிட்டு ஓய்வெடுங்கள். அப்போது இந்த கடிதம் எழுதி முடித்த படியே அனுப்ப வேண்டுமா என சிந்திக்கலாம். மாற்றங்கள் தேவைப்படின் மாற்றலாம். அதன் பின்னர் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருக்கிறதா எனச் சோதனை செய்து பார்த்து அனுப்பலாம்.

No comments:
Post a Comment