நாம்
அனுப்பிய Mail போய் சேர்ந்ததா? நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா?
என்றறிவது அவர்கள் பதில் Mail அனுப்பினால்தான் தெரியும். அதற்கு உதவுவது
தான் இந்த spybig தளம் (SPYPIG)
. இது ஒரு இலவச சேவைதான்.முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பின் மேற்கூறிய இணையத் தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரது இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் drag செய்வது Mail படிப்பவர்களுக்குத் தெரியாது. மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் Drag செய்வது தெரியும். சூழ்நிலைக்குத் தக்க படங்களினைத் தேர்வு செய்வது அவசியம். பின் “Click to activate My Spypig” என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும். அதனை Copy செய்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து Copy செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.
யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:- WWW.SPYPIG.COM


No comments:
Post a Comment