மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் ஜிமெயில் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம்.
மின்னஞ்சலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தேடுவது என்றால் அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஜிமெயில் பயனாளர்கள் மிக எளிதாக தேடும் வகையில் பல்வேறு வசதிகள் உள்ளன.
from:
குறிப்பிட்ட அனுப்புனரின் மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: from:amy
to:
குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :to:david
subject:
subject-ல் உள்ள குறிப்பிட்ட வார்த்தையை வைத்து தேடுவதற்கு. Ex :subject:dinner.
OR:
இரு நபரின் மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :from:amy OR from:david
label:
குறிப்பிட்ட Label –களில் மின்னஞ்சலை தேடுவதற்கு. Ex: from:amy label:friends
has:attachment
மின்னஞ்சலில் ஏதேனும் Attach செய்திருந்தால் அதனை கொண்டு தேடுவதற்கு Ex: from:david has:attachment
filename:
Attachment-ல் உள்ள File Name-களை கொடுத்து தேடுவதற்கு.
larger:
smaller:
குறிப்பிட்ட அளவில் உள்ள மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: larger:10M
circle:
Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex: circle:friends
is:chat
குறிப்பிட்ட வார்த்தை உடைய Chat களை தேடுவதற்கு Ex :is:chat monkey.
after:
before: older: newer:
குறிப்பிட்ட திகதிக்கு முன், பின் வந்த மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :after:2012/04/16 before:2012/04/18.
is:starred
is:unread is:read
Starred, Unread, Read மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :is:read is:starred from:David
in:inbox
in:trash in:spam
குறிப்பிட்ட பகுதியில் உள்ள மின்னஞ்சல்களை தேடுவதற்கு. Ex :in:trash from:amy
is:important
label:important
குறிப்பிட்ட நபரிடம் வந்த மின்னஞ்சல்களில் important என்று குறிக்கப்பட்டதை தேடுவதற்கு. Ex: is:important from:janet
|
Featured Posts
Tuesday, November 27, 2012
ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தேடுவதற்கு
Monday, November 19, 2012
E-mail வழியாக Fax அனயுப்ப வேண்டுமா ?
நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.
சுட்டிகள் : Email to FAX
Sunday, November 18, 2012
Pass Word உடன் E-Mail அனுப்ப வேண்டுமா? - LOCKBIN
ஈமெயில் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவிசெய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும். இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது. நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
தளத்திற்கான சுட்டி
உங்களுடைய Gmail Account வேறு இடத்தில் login செய்யபட்டுள்ளதை Logout செய்ய !
முக்கியமான வசதி ஒன்றை நமக்கு அளிக்கின்றது.அதாவது
உங்களுடைய Gmail Account எங்கெங்கு login செய்யபட்டுள்ளது
என்று உங்களளுக்கு தெரியப்படுத்தும் வசதிதான் அது .
இது என்ன அவ்வளவு முக்கியமான வசதியா ? என்று நீங்கள்
கேட்கலாம். ஆம் இது ஒரு முக்கியமான சேவை ஏனென்றால்
நீங்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலகத்தில் உள்ள உங்கள்
கணினியில் Gmail Acoount - ஐ Logout செய்யலாம் அல்லது
வேறு எங்காவது நீங்கள் logout செய்ய மறந்திருந்தால் , இந்த
சேவை உங்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும் .
அதை எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம் ...
அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என அறிய
நாம்
அனுப்பிய Mail போய் சேர்ந்ததா? நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா?
என்றறிவது அவர்கள் பதில் Mail அனுப்பினால்தான் தெரியும். அதற்கு உதவுவது
தான் இந்த spybig தளம் (SPYPIG)
. இது ஒரு இலவச சேவைதான்.முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பின் மேற்கூறிய இணையத் தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரது இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் drag செய்வது Mail படிப்பவர்களுக்குத் தெரியாது. மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் Drag செய்வது தெரியும். சூழ்நிலைக்குத் தக்க படங்களினைத் தேர்வு செய்வது அவசியம். பின் “Click to activate My Spypig” என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும். அதனை Copy செய்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து Copy செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.
யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:- WWW.SPYPIG.COM
Wednesday, November 14, 2012
ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு
ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உள்ள Settings என்பதில் ஜிமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும்.
அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வரும்மாறும் செட் செய்யலாம்.
தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
Tuesday, November 13, 2012
Email மூலம் மின்னஞ்சல்களை இரகசியமாக அனுப்புவதற்கு !
நம் அன்றாட வாழ்வில் முன்னோருபோது தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பல வழிகள் காணப்பட்டது இப்போது இணையத்தின் உதவியோடு இ -மெயில் மூலம் மின்னஞ்சல்களாக அனுப்புகின்றோம் . அவ் மின்னஞ்சளை அனுப்புவதிலும் பல விசயங்களை மறைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது சில வேளைகளில் ,
அதாவது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் மின்னஞ்சல் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது.
இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது. யாருக்கு மின்னஞ்சல் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம்.
இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும். அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும். காரணம் அவர் படித்து முடித்தபிறகு இந்த செய்தி காணாமல் போய்விடும். அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்பபட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்தியை படித்துவிட முடியாது. இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான மின்னஞ்சல் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் மின்னஞ்சல் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி :
Subscribe to:
Comments (Atom)






