Mobile

Wednesday, October 31, 2012

InBox Pause: ஜிமெயிலின் பயனுள்ள வசதி

உலகில் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையில் முதலிடம் வகிப்பது ஜிமெயில் ஆகும்.

விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.
இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.
இதை நிறுவியதும் Mail dropdown மெனுவில் Pause அல்லது Unpause செய்ய வசதியாக பட்டன்கள் தோன்றும்.
மேலும் இன்பாக்ஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மற்றவர்களுக்கு Auto-Responder மூலம் தெரியப்படுத்தலாம்.

Gmail message ஒன்றினை PDF கோப்பாக மாற்றுவதற்கு


          
    TO
  

இன்றைய திகதியில் பல லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்சல் சேயையாக கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்ட Gmail திகழ்கின்றது.
இதற்கு அனைவராலும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள அதன் எளிமையான வடிவமைப்பும், விரைவான சேவையுமே காரணமாக விளங்குகின்றது.
இப்படியான Gmail முகவரிக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களை தேவை கருதி PDF கோப்பாக மாற்றுவதற்கு நீட்சிகள் காணப்பட்ட போதிலும் அவற்றைப் பயன்படுத்தாது நேரடியாகவே PDF கோப்பினை மாற்றியமைக்கும் வசதி காணப்படுகின்றது.
இதற்கு உங்கள் Gmail முகரியில் உள்நுளைந்து PDF கோப்பாக மாற்றப்படவேண்டி மின்னஞ்சலினை திறக்கவும். பின்னர் கீழே படத்தில் காட்டப்பட்டுள்து போன்று Print all ஐகானை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து தோன்றும் Print dialogue விண்டோவில் காணப்படும் Destination என்பதை Save as PDF ஆக மாற்றியமைத்து Save செய்யவும். இதன் பின்னர் குறித்த மின்னஞ்சலானது PDF கோப்பாக கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும்.


Monday, October 15, 2012

இமெயில்களை Tune செய்திட

இமெயில் பயன்படுத்தாதவர்களையோ அதன் மூலம் பயன் பெறாதவர்களையோ இன்று காண முடியாது. ஏதாவது ஒரு வகையில் இமெயில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பங்கு கொள்கிறது. அல்லது பெறுகிறார்கள். எனவே ஒருவரின் தராதரத்தை நிர்ணயிக்கும் ஒரு சாதனமாக இமெயில் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டாமா? இதோ இமெயில் அனுப்பும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காணலாம்.


1.எழுதுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும். இதற்கு முன் கையாண்ட முறைகளைக் காட்டிலும் மிக வேகமாக செய்திகளை அனுப்பலாம் என்பதற்காக மிக வேகமாக இமெயில் கடிதங்களை எழுதி அனுப்ப வேண்டாம். முதலில் நீங்கள் அனுப்பும் கடிதம் தெளிவாகவும் நீங்கள் சொல்ல விரும்புவதைச் சரியாக எடுத்துக் கூறுவதாகவும் இருக்க வேண்டும்.



2. நீங்கள் என்ன கூறினாலும் பின் நாளில் அதனை நீங்கள் கூறவே இல்லை எனச் சாதிக்கலாம். ஆனால் இமெயில் கடிதத்தில் நீங்கள் எழுதி விடுகிறீர்கள். எனவே என்றும் அதனை மறுக்க இயலாது. எனவே நன்கு யோசித்து இதனை எழுதினால் பிரச்சினை இல்லை என்று முடிவு செய்த பின் எழுதவும்.


3. உங்கள் செய்தி சுருக்கமாக இருக்கட்டும். சாதா ரணமாகத் திரையில் பிற புரோகிராம்களில் தெரியும் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் இமெயிலில் தெரியும். எனவே சுருக்கி எழுதவும். மிக விரிவாக எதனையாவது எழுத வேண்டும் என்றால் அதனைத் தனி பைலாக, டாகுமெண்ட்டாக எழுதி இணைப்பாக அனுப்பவும். சுருக்கி எழுதுகையிலும் தெளிவாக எழுத வேண்டும். சுருக்கிச் சொல்வதாக எண்ணிக் கொண்டு விஷயங்களை மாற்றியோ அல்லது தெளிவில்லாமலோ எழுதக் கூடாது.


4. இமெயில் என்பது இரகசிய ஆவணங்கள் அல்ல. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தங்கள் நிறுவன சர்வரில் இடம் அளித்து இமெயில் பரிமாறிக் கொள்ள அனுமதித்தாலும் அவற்றைப் படித்து பார்க்கும் உரிமையை நிறுவன நிர்வாகிகளும் வைத்திருப்பார்கள். எனவே மற்றவர் படிக்கக் கூடாத செய்திகளை அனுப்ப வேண்டாம்.


5. உங்கள் இமெயில்களைப் படிப்பவர்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். ஒழுக்கத்தைக் கற்றுத் தர முயற்சிக்காதீர்கள். இது பிரச்சினையை வளர்க்கும்.
 
6. தேவையற்ற செய்திகளை அடிக்கடி அனுப்ப வேண்டாம். அது ஸ்பேம் மெயில் மாதிரி ஆகிவிடும். பின் உங்கள் மெயில்களைப் பார்த்தாலே உங்கள் நண்பர்கள் படிக்காமலேயே குப்பைத் தொட்டிக்குப் போகும் வகையில் அழித்துவிடுவார்கள்.


7. ஆங்கிலத்தில் எழுதுகையில் கேப்பிடல் எழுத்துக்களில் எழுதாதீர்கள். இது ஒருவரை நோக்கி தொண்டை கிழிய கத்திப் பேசுவதற்கு ஒப்பாகும். உங்களை நாகரிகமற்றவர் என மற்றவர்கள் எண்ணுவார்கள்.


8. அதற்காக முழுக் கடிதத்தையும் சிறிய எழுத்துக்களில் எழுத வேண்டாம். வழக்கம்போல் எழுதவும்.


9. “Subject” லைனில் நீங்கள் எழுதும் கடிதத்தின் மையக் கருத்தை ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதவும். நான் யார் தெரிகிறதா? இது இவரிடமிருந்து.. என்றெல்லாம் எழுதுவதைத் தவிர்க்கவும்.


10. கடிதத்தை எழுதி முடித்த பின் மூடிவிட்டு ஓய்வெடுங்கள். அப்போது இந்த கடிதம் எழுதி முடித்த படியே அனுப்ப வேண்டுமா என சிந்திக்கலாம். மாற்றங்கள் தேவைப்படின் மாற்றலாம். அதன் பின்னர் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருக்கிறதா எனச் சோதனை செய்து பார்த்து அனுப்பலாம்.

இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்

யாஹூ, ஜிமெயில் போல இல்லாமல் இன்டர்நெட் சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இமெயில் சேவை வைத்துள்ளவர்கள் ஏதேனும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்குகிறோம். அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இடோரா எனப் பலவகையான இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் நமக்கு இவ்வகையில் கை கொடுக்கின்றன. நாம் பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் நமக்கு நம் கம்ப்யூட்டரில் மாறாத இமெயில் புரோகிராம் களாகச் செயல்படுகின்றன.

யாருக்கேனும் இமெயில் அனுப்ப இந்த புரோகிராம்களைத் திறந்து பின் Compose அல்லது New என்னும் பிரிவில் கிளிக் செய்து இமெயில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான விண்டோவினைப் பெற்று டெக்ஸ்ட் அமைத்து அனுப்புகிறோம். அவசர நேரத்திலும் இது போல ஒவ்வொரு முறையும் இந்த புரோகிராம்களைத் திறந்து இந்த பணியை வரிசையாக மேற் கொள்ள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பயன்படும் தகவல் ஒன்றைப் பார்க்கிறீர்கள். உடனே அதற்கான லிங்க் அல்லது அந்த தகவல் குறித்து உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப எண்ணினால் மேலே சொன்ன ஒவ்வொரு வேலையையும் மேற்கொண்டு பின்னர் அனுப்ப வேண்டியுள்ளது.


இதற்குப் பதிலாக ஒரு கிளிக்கில் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்பட்டு புதியதான இமெயில் அமைக்கக் கூடிய வகையில் அதற்கான படிவம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதியும் கம்ப்யூட்டரில் உள்ளது. ஒரு ஷார்ட் கட் உருவாக்கி இதே போல வசதியை மேற்கொள்ள முடியும். இதற்குக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.

1. முதலில் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New என்ற பிரிவில் கிளிக் செய்து பின்னர் கிடைக்கும் பிரிவுகளில் Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இப்போது கிடைக்கும் Create Shortcut என்ற சிறிய விஸார்ட் கிடைக்கும். இதில் Type the Location of the Item என்ற தலைப்பின் கீழ் நீளமான பாக்ஸ் கிடைக்கும்.


3.இந்த பாக்ஸில் நீங்கள் அடிக்கடி இமெயில் அனுப்பும் நண்பர் ஒருவரின், அல்லது உங்களின் இமெயில் முகவரியினை முகவரிக்கு முன்னால் mailto எனச் சேர்த்து mailto:your contact@email.com என டைப் செய்திடவும். அதன்பின் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.


4.இறுதியாக இந்த ஷார்ட் கட்டிற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்றோ அல்லது என்றோ சூட்டுங்கள். அவ்வளவுதான். டெஸ்க்டாப்பில் இன்ஸ்டண்ட் இமெயில் கடிதம் எழுத ஒரு ஷார்ட் கட் ரெடி.


5. இப்போது ஷார்ட் கட் கீயில் கிளிக் செய்திடுங்கள். கண் மூடித் திறக்கும் நேரத்தில் உங்கள் இமெயில் புரோகிராம் திறக்கப்பட்டு மெயில் அனுப்ப டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்த முகவரியுடன் இந்த விண்டோ இருக்கும். அந்த இடத்தில் யாருக்கு இமெயில் அனுப்ப வேண்டுமோ அந்த முகவரியினை டைப் செய்து Send கிளிக் செய்தால், இன்டர்நெட் இணைப்பில், இமெயில் சென்று விடும்.

Sunday, October 14, 2012

மின்னஞ்சல் முகவரி

 அதிக பாவனையாளர்கள் பாவிக்கும் இலவச மின்னஞ்சல் சேவைக்கான முதல் ஐந்து தளங்களாக கருதப்படுபவை:
 
www.gmail.com

www.fastmail.ca

www.hotmail.com

 
www.yahoo.ca அல்லது www.yahoo.com
 

www.mail.com